சிறுகுற்றம் புரிந்த 74 பேர் கைது

arrest_1யாழில் சிறு குற்றங்கள் புரிந்த 74பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா நேற்று தெரிவித்தார்.

யாழ். மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள தகவல்களின் பிரகாரம் யாழில் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 19 பேரும், சட்ட விரோத மதுபான விற்பனை 19 பேரும், விபத்துக்களை ஏற்படுத்திய 05 பேரும், மதுபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த 07 பேரும், சுற்றுச் சூழல் மாசடையும் விதத்தில் குப்பை கூழங்களை போட்டவர்கள் 03 பேரும், மோதலில் ஈடுபட்டவர்கள் 16 பேரும், சந்தேகத்தின் பெயரில் 05 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related Posts