நியுயோர்க்கில் நேற்று நடைபெற்ற 71ஆவது ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் ஐநா செயலார் பான்கிமூன் சிறீலங்காவில் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாகவும் உரையாற்றியுள்ளார்.
ஐநா பொதுச்சபையின் 71ஆவது கூட்டத்தொடரில் சிறீலங்கா அதிபர் உட்பட 193 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் தனது பதவியிலிருந்து ஓய்வுபெறவுள்ள ஐநா செயலர் பான்கிமூன் ஆரம்ப உரையாற்றி கூட்டத்தொடரைத் தொடக்கிவைத்ததுடன் தனது இறுதி உரையையும் ஆற்றியுள்ளார்.
உலகில் பல்வேறு நாடுகளில் இடம்பெறும் மோதல்கள் தொடர்பாகவும், அவற்றுக்குத் தீர்வு காண எடுக்கப்படும் முயற்சிகள் தொடர்பாகவும், மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான செயற்திட்டங்கள் குறித்தும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
மேலும் அவரது உரையில், சிறீலங்காவில் போருக்குப் பிந்திய காயங்களைக் குணப்படுத்தும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.
பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் என்றில்லாமல், எல்லா சமூகங்களையும் உள்ளடக்கிய புதிய இணைப்பு ஒன்றைக் கட்டியெழுப்புவதிலேயே உண்மையான நல்லிணக்கம் தங்கியுள்ளது.’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.