Ad Widget

சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களுக்கு ஐந்து வருட வரி விலக்கு

சிறிய மற்றும் நடுத்தர வர்க்க முயற்சியாளர்களுக்கு ஐந்து வருட வரி விலக்கு வழங்கப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, 28 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக வரி வீதம் குறைக்கப்படவுள்ளதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.

இதன்போது, ஏற்றுமதிக்கான பொருட்கள், உள்ளூர் உணவு தேவைக்கான விவசாய உற்பத்திகள் மற்றும் தொழிற்சாலை மூலப் பொருட்களாக பயன்படுத்தப்படும் பொருட்கள் உள்ளிட்ட இரண்டு குறிக்கோள்களை அடையும் வகையில் இந்த திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, தேயிலை, பலசரக்கு, தெங்கு, றப்பர், நெல், பழங்கள் மரக்கறி ஆகிய எந்தவொரு தொழிற்சாலை சார்ந்த பிரிவுகளில் கிடைக்கும் வருமானம், குறிப்பாக சிறிய வர்க்கத்திலான முயற்சியாளர்களுக்கு 5 வருடங்களுக்கான வரிகளில் இருந்து விலக்களிக்கப்படவுள்ளது.

உள்நாட்டு விவசாய பொருட்களை கொண்டு மேற்கொள்ளப்படும் தயாரிப்புகளில் இருந்து கிடைக்கும் வருமானத்தின் மீது நூற்றுக்கு 28 சதவீதத்திலிருந்து 14 சதவீதம் வரை வரி குறைக்கப்படவுள்ளது.

இதன் ஊடாக விவசாய தொழில் துறையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மாத்திரமன்றி நுகர்வோருக்கும் நன்மை ஏற்படும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Posts