சிறந்த தலைமைத்துவத்தைக் கொண்ட எதிர்கால சந்ததியை உருவாக்குவதே எமது நோக்கம் – ஜனாதிபதி

ஆரோக்கியமான சமூகத்தை மட்டுமன்றி சிறந்த தலைமைத்துவத்தைக் கொண்ட எதிர்கால சந்ததியை உருவாக்குவதே எமது அரசின் நோக்கமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.

vaddu-hindu-students-mahintha

வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரியில் மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை நேற்றய தினம் (14) திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் வட்டுக்கோட்டையில் எனக்கு நெருங்கிய உறவினர்கள் இருக்கின்றார்கள் என்பதை இந்தவேளையில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன் என்பதுடன் இப்பாடசாலையில் கல்வி கற்ற மாணவர்கள் பலர் பல்வேறு துறைகளிலும் இந்நாட்டில் உயர்பதவிகளை வகித்து வருகின்றனர்.

இப்பாடசாலையின் கல்வித்துறையை மேம்படுத்தும் பொருட்டு மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடம் அமைக்கப்பட்டுள்ள போதிலும் இங்கு விஞ்ஞான ஆய்வு கூடமொன்றை அமைப்பதற்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

அதுமட்டுமன்றி பூர்த்தி செய்யப்படாத நிலையில் கட்டிடங்களையும் உரியமுறையில் முழுமை பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். இதனூடாகவே தகவல் தொழில்நுட்பத்தை முன்னேற்ற முடியும்.

எமது மாணவர்கள் கல்வியிலும் மட்டுமல்லாது விளையாட்டுத்துறையிலும் முன்னேற்றம் காண வேண்டுமென்பதை கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு முதல் விளையாட்டுத்துறையை கட்டாய பாடமாக்கவும் எண்ணியுள்ளோம்.

இதன்மூலமே ஆரோக்கியமான சமூகத்தை வளர்த்தெடுப்பது மட்டுமன்றி சிறந்த தலைமைத்துவத்தைக் கொண்டதான சமுதாயத்தையும் கட்டியெழுப்ப முடியுமென்றும் சுட்டிக்காட்டினார்.

முன்பதாக பாடசாலை சமூகத்தால் பிரதான வாயிலில் வரவேற்கப்பட்ட ஜனாதிபதி அவர்கள் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடத்தையும் திறந்து வைத்தார்.

vaddu-hindu-students-1

vaddu-hindu-students-2

vaddu-hindu-students-3

vaddu-hindu-students-mahintha-2

Related Posts