சிறந்த கோழி வளர்ப்பாளருக்கான விருதை பெற்ற பெண்

வட மாகாண விவசாய அமைச்சால் நடத்தப்பட்ட உழவர் திருநாள் போட்டியில், வட மாகாணத்தில் சிறந்த கோழி வளர்ப்பாளருக்கான விருதை இராமன் சுதர்சினி என்ற பெண் பெற்றுக்கொண்டார்.

raman-sutharsini

யுத்தத்தில் கணவனை இழந்த இவர், தனது இரண்டு பிள்ளைகளுடன் அம்பாள்புரத்தில் வசித்து வருகின்றார். இவர் தனது வீட்டில் கோழிப்பண்ணை ஒன்றை உருவாக்கி நடத்தி வருகின்றார். இவரது கோழிப்பண்ணையை நாளடைவில் விரிவாக்கிய இவர், தனது ஊரைச் சேர்ந்த 4 பெண்களுக்கு கோழிப் பண்ணையில் தொழில் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.

அவர்கள் நால்வருக்கும் தலா 15 ஆயிரம் ரூபாய் மாதாந்த வேதனமாக வழங்கி வருகின்றார். கோழிகளின் கழிவுகளை விவசாயத்துக்கு பயன்படுத்தி சிறந்த முறையில் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கின்றார். இதனைக் கருத்திற்கொண்டு வட மாகாணத்தின் சிறந்த கோழிப் பண்ணையாளராக இவர் தெரிவு செய்யப்பட்டார்.

வடமாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில், வவுனியா நகரசபை மண்டபத்தில் கடந்த 25ஆம் திகதி நடைபெற்ற உழவர் விழா நிகழ்வில் வைத்து, இவருக்கான விருதை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வழங்கினார்.

Related Posts