வவுனியா வைத்தியசாலையில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் புதிதாக நியமனம் கிடைக்கப்பெற்று பணிபுரியும் பெண் வைத்தியர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
வெளிநாட்டில் படித்துவிட்டு பெண் நோயியல் பிரிவில் புதிதாக நியமனம் கிடைக்கப்பெற்று வவுனியா பொது வைத்தியசாலையில் பணிபுரிந்து கொண்டிருக்கும் வைத்தியசாலை விடுதி 7 க்கு பொறுப்பாக இருக்கும் பெண் நோயியல் வைத்திய நிபுணர் கனிஷ்க, மூத்த வைத்தியர் பிரஹித் (இவர்கள் இருவரும் பொரும்பான்மையின வைத்தியர்கள் ) ஆகிய இருவரும் தமக்கு கீழ் வேலை செய்ய வேண்டும் என்றும் தாம் சொல்வதை கேட்டு நடக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
அதைவிடுத்து பெண் நோயியல் வைத்தியர் வேறு ஒருவரின் கீழ் பணிபுரிவதை அறிந்த வைத்திய நிபுணர் கனிஷ்க என்பவரின் கீழ் பணிபுரியும் வைத்தியர் பிரஹித் என்பவர் குறிப்பிட்ட பெண் வைத்தியரை ஏசி, அடிக்க போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,
இந்நிலையில், மன உளைச்சல் தாங்க முடியாத பெண் வைத்தியர் மாத்திரையை அதிகளவாக போட்டதனால் அவரின் நிலைமை கவலைக்கி, உடனடியாக அவசர சிகிச்சை பிரிவிற்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறிப்பிட்ட வைத்திய நிபுணர் பிரஹித் என்பவர் முன்பும் பெண் வைத்தியருடன் பிரச்சினைப்பட்டு மாத்திரை போட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறிப்பிடப்பட்ட வைத்தியர்கள் வைத்தியசாலையில் பணி புரியும் ஏனையவர்களுடனும் வாய்த்தர்க்கங்களில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.