நாட்டின் சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு கணக்குகளுக்கு வழங்கப்படவுள்ள 15 வீத விஷேட வட்டிக்கான அதிகபட்ச நிலையான வைப்பு தொகை 10 இலட்சத்திலிருந்து 15 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
2017 வரவு செலவு திட்டத்தில் முன் வைக்கப்பட்ட குறித்த யோசனை மார்ச் மாதம் 01ம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கு இந்த விஷேட வட்டி வழங்கப்பட உள்ளது.
அதன்படி வங்கிகளினால் வழங்கப்படுகின்ற வட்டி வீதத்திற்கு மேலதிக 15 வீதம் வரையான வட்டி தொகை அரச திறைசேரியினால் வங்கிகளுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.