Ad Widget

சிரியாவில் உளவாளியை சுட்டுக் கொல்லும் 10 வயது சிறுவன்!

சிரியாவில் இஸ்ரேல் நாட்டிற்கு உளவு பார்த்ததாகக் கூறி பாலஸ்தீனியர் ஒருவரை, 10 வயது சிறுவன் சுட்டுக் கொலை செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலஸ்தீனிய நாட்டை சேர்ந்த முகமது சயீது இஸ்மாயில் முசாலாம் என்ற 19 வயதான இளைஞர், கடந்த 2014 ஆம் ஆண்டு சிரியாவுக்குச் சுற்றுலா செல்வதாகப் பெற்றோரிடம் கூறிவிட்டு ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் ரகசியமாகச் சேர்ந்து பணிபுரிந்து வந்தார்.

sereya-IIS-boy-shoot

பின்னர் சிறிது காலம் கழித்து, தான் தவறான முடிவை எடுத்துவிட்டதாகவும், ஒரு நாட்டுக்குள் நடைபெறும் போரில் பல்வேறு படுகொலைகள் செய்து வருவதாகவும், தன்னை மீட்கும்படி பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். அவர்களும் தங்கள் மகனை விடுவிக்கும்படி ஐஎஸ் அமைப்பிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில், இஸ்ரேல் நாட்டுக்கு உளவு பார்த்ததாக குற்றம்சாட்டி, முகமது சயீது இஸ்மாயில் முசாலாமை கடந்த ஒரு மாதமாக துருக்கி எல்லையில் ஐஎஸ் தீவிரவாத சிறையில் வைத்திருந்தனர். இந்நிலையில், முகமது இஸ்மாயில் நேற்று ஐஎஸ் தீவிரவாத இயக்கதினரால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக 13 நிமிடம் ஓடும் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில், 10 வயதுக்குள் இருக்கும் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன், முகமது சயீது இஸ்மாயிலை துப்பாகியால் சுடும் காட்சி பதிவாகி இருந்தது. சில வாரங்களுக்கு முன்பு ஜோர்டான் பிணைக்கைதி, உயிருடன் எரித்துக் கொல்லப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பு 10 வயது சிறுவனைக் கொண்டு பாலஸ்தீன இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட வீடியோ வெளியாகி இருக்கிறது.

Related Posts