சிம்பு வராததால் காத்திருக்கும் கௌதம் மேனன்

‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் இடம் பெறுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கும் ‘தள்ளிப் போகாதே’ பாடலை இதுவரை 1 கோடியே 58 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். இந்தப் பாடலைப் படமாக்குவதற்காக படக் குழுவினருடன் சுமார் 80 லட்ச ரூபாய் செலவு செய்து துருக்கி நாட்டிற்குச் சென்றிருக்கிறார் கௌதம் மேனன். ஆனால், தெலுங்கில் நடிக்கும் ஹீரோவான நாக சைதன்யா சொன்ன நேரத்தில் சரியாக வந்துவிட தமிழில் நடிக்கும் சிம்பு படப்பிடிப்புக்கே போகாமல் ‘டிமிக்கி’ கொடுத்திருக்கிறார். அதன் பின்னாவது சென்னையில் வைத்து படப்பிடிப்பை முடித்துக் கொள்ளலாம் என நினைத்தால் சிம்பு இதுவரை படப்பிடிப்புக்கே வர மறுக்கிறார்.

simbu-gowtham

சிம்பு வந்தால் மட்டுமே ‘தள்ளிப் போகாதே’ பாடலைப் படமாக்க முடியுமாம். அவர் வரவில்லை என்றால் அந்தப் பாடல் படத்தில் இடம் பெறாது என கௌதம் மேனன் தெரிவித்துள்ளார். மட்டரகமான படங்களில் நடித்துக் கொண்டிருந்த சிம்புவை ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படம் மூலம் கிளாசிக் நடிகராகக்கிய கௌதம்மேனனுக்கே இந்த நிலையா என திரையுலகமே அதிர்ச்சியில் உள்ளதாம்.

சூரியன் மேற்கே உதித்தாலும் உதிக்குமே தவிர சிம்பு திருந்துவார் என்பது எப்போதுமே நடக்காது ஒன்று என்று கோலிவுட்டில் கௌதம் மேனன் – சிம்பு பற்றித்தான் தற்போது பரபரப்பான பேச்சு.

Related Posts