சிம்பு வரலட்சுமி திடீர் ஜோடி

அச்சம் என்பது மடமையடா படத்தின் வெற்றி விருந்தில், சிம்புவுடன் நடிகை வரலட்சுமியும் பங்கேற்றார். விண்ணை தாண்டி வருவாயா படத்திற்கு பின், சிம்பு நடித்த எந்த படமும் பெரிய வெற்றி பெறவில்லை. படங்களின் வெளியீடும், பல்வேறு பிரச்னைகளை சந்தித்தது. இந்நிலையில், மூன்றாண்டாக படப்பிடிப்பில் இருந்த, அச்சம் என்பது மடமையடா படம், சமீபத்தில் வெளியானது.

simbu-varalakshimi

இதற்கு, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், சிம்பு மகிழ்ச்சியில் உள்ளார். அதை கொண்டாடும் வகையில், நட்சத்திர ஓட்டலில் விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதில் சிம்பு, த்ரிஷா, வரலட்சுமி, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

விஷாலின் ஜோடி என கூறப்படும் வரலட்சுமி, சிம்புவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள், திடீரென வெளிவர துவங்கி உள்ளன. சிம்புவும் வரலட்சுமியும், போடா போடி படத்தில் ஏற்கனவே ஜோடி சேர்ந்தவர்கள்.

Related Posts