சிம்பு-தனுஷ் இருவரும் நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
தங்களுக்குள் எந்த ஈகோவும் இல்லை என்று பல மேடைகளில் அவர்களே கூறியிருக்கிறார்கள்.
இந்நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு விரைவில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இப்படத்தில் இரண்டாம் உலகத்தை போன்றே நிறைய கிராபிக்ஸ் வேலைகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் ஒரு சின்ன கெஸ்ட் ரோலில் தனுஷ் தலையை காட்டவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.