சிம்பு இப்படி செய்யலாமா – கவலையில் பாண்டிராஜ்

சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுத்து போர் அடித்து போய் ஒரு புதிய மாற்றத்துக்காக சிம்புவிடம் கதை சொல்லி இது நம்ம ஆளு படத்தை எடுக்க ஆரம்பித்தார் பாண்டிராஜ்.

simbhu_pandiraj004

ஆனால் படம் ஆரம்பித்ததிலிருந்து ஒரே பிரச்சனை தான், ஷூட்டிங் தள்ளிபோய் கொண்டு இருந்தது பின்னே சிம்பு வைத்து படம் எடுப்பது என்றால் சும்மாவா, தற்போது வரை படம் 75 சதவிதம் கூட படம் முடியவில்லை.

இது வேலைக்கு ஆகாது என்று பாண்டிராஜ் சூர்யாவிடம் சிறுவர்கள் பற்றி வேறு ஒரு பரிமாணத்தில் கதை சொல்லி ஓகே வாங்கி படப்பிடிப்பு ஜோராக நடந்து கொண்டு இருக்கிறது,

இருந்தாலும் அவருக்கு சிம்பு படம் முடிக்கவில்லையே என்று ஒரு கவலை இருந்தது, இடையில் இது நம்ம ஆளு படத்தில் இன்னொரு வேடத்துக்காக டாப்சியை புக் செய்தார் பாண்டிராஜ், அவரும் அவர் கதாபாத்திரம் பிடித்து போக ஓகே சொல்லியுள்ளார். சரி என்று சம்பளம் விஷயமாக (படத்தின் தயாரிப்பாளர் சிம்பு தானே) சிம்பு பாக்க சென்றவருக்கு செம அதிர்ச்சி.இந்த வாரம் இது நம்ம ஆளு படப்பிடிப்பை நடத்தி விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தவரின் நினைப்பில் விழுந்தது சம்மட்டி அடி.

சிம்பு தன் ஹேர் ஸ்டைலை முற்றிலும் மாற்றியிருந்தாராம். அதுவும் இரண்டு பக்கமும் டைட்டாக கட் பண்ணி.நீங்க இப்படி கட் பண்ணிட்டு நின்னா, கன்ட்டினியூட்டியே இருக்காதே? இது வளர இன்னும் ஒரு மாசம் ஆகும் போலிருக்கே’ என்று பதறிப் போயிருக்கிறார் பாண்டி. ‘வளரட்டுமே… அதுக்கென்ன இப்போ? வளர்ந்த பிறகு சொல்லியனுப்புறேன்… வாங்க’ என்றாராம் சிம்பு. டாப்ஸி விவகாரத்தை அப்படியே மறந்துவிட்டு ரிட்டர்ன் ஆகிவிட்டார் பாண்டிராஜ்.

Related Posts