சிம்பு இசையில் அனிருத் பாடிய பாடல்!

‘பீப்’ பாடல் பிரச்சனை வந்த போது சிம்புவும், அனிருத்தும் அவர்கள் இருவரும் நண்பர்களே இல்லை என்பது போலவே பேசினார்கள். அனிருத் இசையமைக்க சிம்பு பாடியதாகச் சொல்லப்பட்ட அந்த ‘பீப்’ பாடல் அப்போது மிகவும் பரபரப்பான சர்ச்சையைக் கிளப்பியது.

சிம்பு – அனிருத் இருவருக்கும் எதிராக பல வழக்குகள் தொடுக்கப்பட்டன. ஒரு வழியாக அந்தப் பிரச்சனை அப்படியே கிடப்பில் போடப்பட்டது. சிம்புவும், அனிருத்தும் அதன் பின் பிரிந்துவிட்டார்கள், அவர்களுக்குள் நட்பு இல்ல என்று கூட சொன்னார்கள்.

பிப்ரவரி 3ம் தேதி தன்னுடைய பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய போது அதில் அனிருத்தும் கலந்து கொண்டார். அவர்கள் இருவரும் ‘பீப்’ பாடல் சர்ச்சைக்குப் பிறகும் நண்பர்களாகத்தான் இருக்கிறார்கள்.

இதனிடையே, சிம்பு இசையமைப்பில் சந்தானம் நாயகனாக நடிக்கும் ‘சக்க போடு போடு ராஜா’ படத்திற்காக சிம்பு இசையில் அனிருத் ஒரு பாடலைப் பாடியுள்ளார்.

பாடல் ஒலிப்பதிவின் போது எடுக்கப்பட்ட வீடியோவைக் கூட சிம்பு டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். “என்ன ஒரு மாற்றம், நான் ஒலிப்பதிவு செய்கிறேன், அனிருத் பாடுகிறார், நன்றி அனி” எனக் கூறியுள்ளார். அதற்கு அனிருத்தும், “உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன் சிம்பு,” என பதிலளித்துள்ளார்.

Related Posts