சிம்பு, அனிருத் விசாரணைக்கு ஆஜராக அழைப்பாணை

நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் கோவை, ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் டிசம்பர் 19-ஆம் தேதிநேரில் ஆஜராக வேண்டும் என போலீஸார் அழைப்பாணை வழங்கியுள்ளனர்.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மாவட்டச் செயலாளர் ராதிகா, மாநகர காவல் ஆணையர் அ.அமல்ராஜிடம் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பாடலை சமூக வலை தளங்களில் பரவ விட்ட சிம்பு, அனிருத் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார்.

அதன் பேரில், ரேஸ்கோர்ஸ் போலீஸார், இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.
அதைத் தொடர்ந்து, அவர்கள் வரும் 19-ஆம் தேதி ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராவதற்கான அழைப்பாணையை இருவரிடமும் வழங்குவதற்காக கோவை போலீஸார் சென்னை வந்தனர்.

திங்கள்கிழமை காலை நடிகர் சிம்பு வீட்டுக்குச் சென்ற போலீஸார் அழைப்பாணையை அவரது தந்தை டி.ராஜேந்தரிடம் கொடுத்தனர். அதை அவர் கையொப்பமிட்டு பெற்றுக்கொண்டார்.

அனிருத் புதிய வீட்டுக்கு இடம்பெயர்ந்துவிட்டதால் அவரது வீட்டைத் தேடி வருகின்றனர்.

Related Posts