சிம்புவும் தனுஷூம் சேர்ந்து துருக்கி பயணம்?

கௌதம்மேனன் இப்போது சிம்புவை வைத்து அச்சம்என்பதுமடமையடா படத்தையும் தனுஷை வைத்து எனைநோக்கிப்பாயும்தோட்டா படத்தையும் எடுத்துக்கொண்டிருக்கிறார்.

அச்சம்என்பதுமடமையடா படத்தின் படப்பிடிப்பு பெருமளவு முடிந்துவிட்டதாகவும் பாடல் மட்டும் படமாக்கப்படவேண்டியிருக்கிறது என்றும் சொல்லப்பட்டது. இதற்குநடுவே தனுஷ் படத்தின் படப்பிடிப்பு மார்ச் 14 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.

இவ்விரு படங்களின் பாடல்களைப் படமாக்க துருக்கி செல்லத் திட்டமிட்ட இயக்குநர் கௌதம்மேனன், ஒவ்வொரு படத்துக்காகத் தனித்தனியாகச் செல்லாமல் கவனமாகத் திட்டமிட்டு இரண்டு படக்குழுவினரையும் ஒன்றாக அழைத்துச் செல்லவிருக்கிறாராம்.

ஆம், சிம்புவும் தனுஷூம் சேர்ந்து துருக்கி செல்லவிருக்கிறார்களாம். எதிரும்புதிருமாக இருந்த இருவரும் அண்மைக்காலமாக நட்பாக இருந்து வருகிறார்கள் என்பதால் இது சாத்தியமாயிற்று என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் சமகாலத்தில் போட்டியிலிருக்கும் இரண்டு கதாநாயகர்களை வைத்து ஒரே நேரத்தில் படமெடுப்பதோடு இருவரையும் ஒன்றாகவே படப்பிடிப்புக்காக வெளிநாடு கூட்டிச்செல்கிறார் என்கிற தகவல் மிகவும் ஆச்சரியமாக பேசப்படுகிறது.

Related Posts