சிம்புவுக்கு ராதிகா அட்வைஸ்

நடிகர் சங்கத்திலிருந்து விலகப் போவதாக நேற்று தன்னுடைய நெருக்கமான சில பத்திரிகையாளர்களுக்கு மட்டும் செய்தியை வழங்கினார் சிம்பு. நேற்று முழுவதும் தன்னைப் பற்றிய மீடியாக்கள் பரபரப்பாகப் பேசுவார்கள் என்று சிம்புவும் எதிர்பார்த்தார். ஆனால், அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. சிம்புவின் அந்தச் செய்தி வெளிவந்ததுமே ‘இது நம்ம ஆளு’ படத்திற்கு ‘பப்ளிகுட்டி ஸ்டன்ட்’ அடிக்க ஆரம்பித்துவிட்டார் என்றுதான் கோலிவுட்டில் பேச ஆரம்பித்தார்கள்.

simbu-rathika

நட்சத்திர கிரிக்கெட்டுக்காக சிம்புவை அணுகியதாகவும் அவர்தான் விளையாட வர மறுத்துவிட்டார் என்றும் நடிகர் சங்க வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் தன்னைப் பற்றி பேச வைக்க வேண்டும் என சிம்பு எடுத்த திடீர் அஸ்திரம்தான் ‘நடிகர் சங்க விலகல்’ என்கிறார்கள்.

சொல்லி வைத்தது போலவே இன்று நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமாரின் மனைவியான ராதிகா சரத்குமார், நடிகர் சங்க விலகல் குறித்து சிம்பு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

“ஒரு சீனியர் நடிகையின் அட்வைஸ், நடிகர் சங்கத்தை விட்டு விலக வேண்டாம். என் அப்பா, குடும்பம், உங்களுடைய அப்பா ஆகியோரின் பங்களிப்பு ஆகியவை நடிகர் சங்கத்திற்கு விலை மதிப்பில்லா ஒன்று. இருந்து சண்டை போடுங்கள். இது அவர்களுடைய சொத்து அல்ல, இது நம்முடைய சங்கம், அவர்கள் உங்களை ஆதரிக்க மாட்டார்கள், ஆனாலும் நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள், விட்டுக் கொடுத்து விடாதீர்கள், முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்,” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

சட்டமன்றத் தேர்தலையும் மீறி நடிகர் சங்க விவகாரத்தை விட மாட்டார்கள் போலிருக்கிறது. தேர்தல் விவகாரங்களில் மக்களை மறக்கச் செய்ய, நடிகர் சங்க விவகாரத்தை மீண்டும் கையில் எடுக்கிறார்களோ என நடுநிலையாளர்கள் வருத்தப்பட ஆரம்பித்துவிட்டார்கள்.

Related Posts