சிம்புவின் வோட் சாங்கிற்கு நல்ல வரவேற்பு!

பீப் சாங்கிற்கு முன்பே சிம்பு பல ஆல்பங்களை தயார் செய்து வெளியிட்டு வந்தார் சிம்பு. ஆனால் அவற்றுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்ததில்லை. அதையடுத்து அவர் எழுதி பாடிய, பீப் சாங் வெளியாகி பெரிய அளவிலான சர்ச்சைகளை சந்தித்தது. ஆனால் அதுவே இப்போது சிம்பு வெளியிட்டுள்ள வோட் சாங் ஆல்பத்திற்கு மிகப்பெரிய வரவேற்பினை கொடுத்துள்ளது.

காரணம், சிம்புவின் முந்தைய ஆல்பம் விவகாரமாக இருந்ததால், இந்த ஆல்பத்தில் அவர் என்னதான் சொல்லியிருக்கிறார் என்பதை பார்க்க கடந்த 11-ந்தேதி யு டியூப்பில் வோட் சாங் ஆல்பத்தை சிம்பு வெளியிட்டபோது ஏராளமானோர் அதை பார்த்துள்ளனர் . அதாவது ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் பார்த் துள்ளார்களாம். அதேபோல் 4 ஆயிரம் பேருக்கு மேல் லைக் கொடுத்துள்ளார்களாம். இது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறதாம். அதனால் பீப் பாடல் சர்ச்சையில் தடுமாறிப்போயிருந்த சிம்பு, வோட் சாங்கின் வரவேற்பினால் உற்சாகமடைந்துள்ளார்.

Related Posts