சிம்புவின் புதிய கெட்டப் வெளியானது!

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் சிம்புவின் புதிய கெட்டப் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இது நம்ம ஆளு படத்தின் வெற்றிக்குப் பின் சிம்பு நடித்திருக்கும் அச்சம் என்பது மடமையடா திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

simbu

இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில், சிம்புவின் புதிய கெட்டப் ஒன்றை படக்குழு வெளியிட்டிருக்கிறது.

அடர்ந்த முடி, அடர்ந்த தாடியுடன் இருக்கும் சிம்புவின் இந்த புதிய கெட்டப் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.

இப்படத்தில் சிம்புவின் மேக்கப் கலைஞராக ஹாலிவுட்டைச் சேர்ந்த சீன் பூட் பணியாற்றி வருகிறார்.

முதன்முறையாக சிம்பு இதில் 3 வேடங்களில் நடிக்கவுள்ளார். அதில் ஒரு வேடத்துக்காக உடல் எடையை அதிகரித்து குண்டான தோற்றத்திற்கு மாறியிருக்கிறார். இப்படத்தின் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

யுவன் இசையில் 9 பாடல்களைப் பதிவு செய்யப் போவதாகவும், அதில் ஒரு பாடல் பதிவு முடிந்து விட்டதாகவும் படக்குழு அறிவித்துள்ளது. 5 வருடங்களுக்குப் பின் மீண்டும் சிம்பு-யுவன் கூட்டணி இப்படத்தில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts