சிம்புவின் பட தலைப்பு மே 1ல் அறிவிப்பு

இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு,மஞ்சிமா மேகன் நடித்து வெளிவர இருக்கும் படம் அச்சம் என்பது மடமையடா.சிம்பு இதனைத் தொடர்ந்து திரிஷா இல்லேன்னா நயன்தாராபடத்தை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் இப்படத்திற்கான பெயரை மே 1ல் அறிவிப்பதாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அவரின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

மேலும் மூன்று வேடத்தில் சிம்பு நடிக்கும் இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது. இதன் மூலம் இந்த படத்தின் தலைப்பு என்ன என்பதற்கு இயக்குனர் ரசிகர்களுக்கு ஒரு க்ளூவையும் கொடுத்திருக்கிறார்.

இதனை வைத்துப் பார்க்கும்போது சிம்புவின் கதாபாத்திரங்களின் பெயர் படத்தின் தலைப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரிஷா இல்லேன்னா நயன்தாரா,வெர்ஜின் மாப்பிள்ளை என இளைஞர்களைக் கவரும் வகையில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக வைத்து எடுக்கப்படும் படத்திற்கு ஆதிக் ரவிச்சந்திரன் பெயர் வைத்து வருகிறார்.அந்த வரிசையில் சிம்பு படமும் இணையுமா? என்று எதி்ர்பார்ப்பு கூடியுள்ளது.

Related Posts