சிம்புக்கு சாமியார் கூறிய அறிவுரை

வாலு படத்தில் நடித்து வந்தபோது பல பிரச்சினைகளை சந்தித்தார் சிம்பு. ஹன்சிகாவுடன் காதல் மலர்ந்து சில மாதங்களிலேயே முடிவுக்கு வந்தது. அதன்பிறகு வாலு படம் அவ்வப்போது கிடப்பில் போடப்பட்டது.

பின்னர் அந்த படத்தை வெளியிட முடியாத நிலை என பல பிரச்சினைகளை சிக்கி சிதைந்து போனார் மனிதர். அதோடு சினிமாவில் வேலை இல்லாததால் கைசெலவுக்கு கூட பணம் இல்லாமல் அம்மாவிடம் கேட்டு வாங்கி செலவு செய்து வருகிறேன் என்றும் ஒரு மேடையில் சொல்லி கண்கலங்கினார் சிம்பு.

இப்படி பல பிரச்சினைகளால் மன நிம்மதி போய், மனதை அமைதிப்படுத்தும் முயற்சியாக ஆன்மீகத்தில் ஆர்வம் காட்டி வந்தார் சிம்பு.

அதை தற்போது ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்துள்ள சிம்பு, திருவண்ணாமலைக்கு சென்று அந்த கோயிலில் இருந்த ஒரு சாமியாரிடம், சினிமாவில் சரியான வாய்ப்பு இல்லை. அதனால் மனதில் நிம்மதி இல்லை. நடிப்பை விட்டு விட்டு சாமியாராகி விட நினைக்கிறேன் என்றாராம்.

அதற்கு அந்த சாமியார்,

இந்த பூமியில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு கர்மா உள்ளது. அதை நாம் நிறைவேற்ற வேண்டும். அந்த வகையில், நான் சாமியாராக இருக்க வேண்டும் என்பது எனது கர்மா. அதேபோல் உங்களுக்கு கொடுத்திருக்கிற கர்மாவை நீங்கள் செய்ய வேண்டும். அதை விடுத்து சாமியாராக நினைக்க வேண்டாம் என்று தனது சார்பில் அறிவுரை வழங்கினாராம்.

அதனால்தான் சாமியாராக நினைத்த சிம்பு மறுபடியும் நடிக்க வந்தாராம். அதேபோல் அந்த சாமியார், நல்லதையே யோசி, ஏழைகளுக்கு உதவி செய் என்று சொன்னதை கடைபிடித்து வருகிறாராம் சிம்பு.

Related Posts