சிம்பாவே, இலங்கை டெஸ்ட் போட்டி : தடுமாறுகிறது சிம்பாப்வே!

இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள சிம்பாவே அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாவே அணித்தலைவர் கிறேம் கிறீமர் முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய சிஹாபா மற்றும் ஹமில்டன் மசகட்சா நிதானமாக ஆட்டத்தை ஆரம்பித்தனர். எனினும் ரங்கன ஹேரத் பந்துவீச்சை ஆரம்பிக்க சிஹாபா 12 ஓட்டங்களுடனும் மசகட்சா 19 ஓட்டங்களுடனும் இலக்கை பறிகொடுத்தார்கள். தொடர்ந்து கன்னி டெஸ்ட் தலைமைத்துவத்தை நிகழ்த்துகிற சந்திமால் அற்புதமாக பந்து வீச்சு மாற்றங்களை மேற்கொள்ள, முஷகந்தா 6 ஓட்டங்களுடனும் வில்லியம்ஸ் 22 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.

மதிய போசன இடைவேளைக்காக ஆட்டம் நிறுத்தப்படும் போது சிம்பாப்வே அணி 28 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில் 4 இலக்கு நஷ்டத்திற்கு 96 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

களத்தில் சிகந்தர் ராசா 17 ஓட்டங்களுடனும், ஏர்வின் 19 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது ஆடி வருகின்றனர். பந்து வீச்சில் ரங்கன ஹேரத் இரண்டு இலக்குக்களையும், லகிரு குமார மற்றும் டில்ருவான் பெரேரா தலா ஒரு இலக்குக்களையும் கைப்பற்றியுள்ளார்கள்.

Related Posts