சிம்பாப்வே அணி 3 விக்கட்டுகளால் வெற்றி

ஹம்பாந்தோட்டை – சூரியவெவ மஹிந்த ராஜபக்‌ஷ மைதானத்தில் நடைபெற்ற சிம்பாபே அணிக்கு எதிரான 5 வதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 3 விக்கட்டுகளால் தோல்வியடைந்துள்ளது.

நாணய சுழற்சியில் வென்ற சிம்பாபே அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுகளை இழந்து 203 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் அசேல குணரத்ன 59 ஓட்டங்களையும், தனுஸ்க குணதிலக்க 52 ஓட்டங்களையும் பெற்றனர்.

தொடர்ந்து பதிலளித்தாடிய சிம்பாப்வே அணிக்கு 39.1 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து 204 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

துடுப்பாட்டத்தில் ஹமில்டன் மசகட்ஸா 73 ஓட்டங்களையும், சொலமன் மயர் 42 ஓட்டங்களையும் பெற்றனர்.

இதன்படி, சிம்பாப்வே அணி இன்றைய வெற்றியுடன் தொடரையும் கைப்பற்றியுள்ளது.

தொடரின் ஆட்டநாயகனாக ஹமில்டன் மசகட்ஸா தெரிவு செய்யப்பட்டார்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக சிகந்தர் ரஸா தெரிவானமை குறிப்பிடத்தக்கது.

Related Posts