சிம்பாப்வே அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கை குழாம் அறிவிப்பு

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாப்வே அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாப்வே அணி இலங்கை அணியுடன் 5 ஒருநாள் போட்டிகளிலும் ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடவுள்ளது.

காலியில் இடம்பெற்ற முதலிரு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டியில் வெற்றி பெற்று 1:1 என்ற புள்ளிகள் அடிப்படையில் சமநிலையில் உள்ளன.

இந்நிலையில் சிம்பாப்வே அணிக்கிடையிலான 3, 4, 5 ஆவது போட்டியில் விளையாடவுள்ள 14 பேர் கொண்ட இலங்கை அணிகுழாம் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான எஞ்சிய 3 போட்டிகளும் சூரியவெவ மஹிந்த ராஜபக்ஸ விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளன. 3 ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்ட இலங்கை குழாம் பின்வருமாறு,

அஞ்சலோ மெத்தியூஸ் (அணித் தலைவர்), உபுல் தரங்க (உதவி அணித் தலைவர் ), நிரோஷன் டிக்வெல்ல, தனுஷ்க குணதிலக்க, குசல் மெண்டிஸ், அசேல குணரத்ன, வனிது ஹசரங்க, சாமர ஹப்புகெதர, சந்தகன், அகில தனஞ்சய, நுவான் பிரதீப், லசித் மலிங்க, துஷ்மந்த சாமிர, லகிரு குமார ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

Related Posts