சிம்பாப்வே அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கைக் குழாம் அறிவிப்பு!

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாப்வே அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாப்வே அணி இலங்கை அணியுடன் 5 ஒருநாள் போட்டிகளிலும் ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடவுள்ளது.

இந்நிலையில் சிம்பாப்வே அணிக்கெதிராக முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் விளையாடவுள்ள இலங்கை அணி குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிம்பாப்வே அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 30 ஆம் திகதியும் 2 ஆவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 2 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, அணியின் உதவித் தலைவராக கடமையாற்றி வந்த டினேஸ் சந்திமல் நீக்கப்பட்டு உதவித்தலைவராக உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளார். திஸர பெரோர அணியில் இடம்பெறவில்லை.

இந்நிலையில் அண்மைக்காலமாக சிக்கல்களில் சிக்கிவரும் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க குழாமில் உள்வாங்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்ட இலங்கை குழாம் பின்வருமாறு,

அஞ்சலோ மெத்தியூஸ் (அணித் தலைவர்), உபுல் தரங்க (உதவி அணித் தலைவர் ), நிரோஷன் டிக்வெல்ல, தனுஷ்க குணதிலக்க, குசல் மெண்டிஸ், அசேல குணரத்ன, வனிது ஹசரங்க, சந்தகன், அகில தனஞ்சய, நுவான் பிரதீப் பொர்னாண்டோ, லசித் மலிங்க, துஷ்மந்த சாமிர, லகிரு மதுஷங்க ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

Related Posts