சின்னத்திரை நடிகை சபர்ணா தற்கொலை?

பிரபல சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்த நடிகை சபர்ணா தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

tv-actress-sabarna-suicide

சென்னை மதுரவாயலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தற்கொலை செய்துக் கொண்ட சபர்ணாவின் உடலை அழுகிய நிலையில் மீட்ட போலீசார், அவரது மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சின்னத்திரை தொடர்கள் மற்றும் சில திரைப்படங்களில் நடித்துள்ள சபர்ணா, மர்மமான முறையில் அவரது இல்லத்தில் பிணமாக கிடந்தது சின்னத்திரை நடிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையைச் சேர்ந்த சபர்ணா, இசை சேனலில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடர்ந்து பின்னர் சன், விஜய், ஜி தொலைக்காட்சி சீரியல்களில் வில்லியாக நடித்து பிரபலமானவர். காதலில் தோல்வியுற்ற நடிகை சபர்ணாவுக்கு அவரது பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சந்தேகத்துக்கு இடமான வகையில் சபர்ணா இறந்து கிடந்தது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Posts