சினிமாவுக்கு வருகிறார் திவ்யதர்ஷினி (டிடி)

சின்னத்திரையின் நட்சத்திர தொகுப்பாளினி டிடி என்று செல்லமாக அழைக்கப்படுபவர் திவ்யதர்ஷினி. காப்பி வித் டிடி மூலம் புகழ்பெற்ற டிடி தொடர்ந்து விஜய் டிவியின் சிறந்த தொகுப்பாளினி விருதை பெற்று வருகிறார். திரையுலகைச் சேர்ந்த அனைவருமே டிடியின் நண்பர்கள்தான்.

DD-Diviya-tharsini

இதுவரை சினிமாவில் நடிக்க வந்த வாய்ப்புகளை மறுத்து வந்த டிடி, இப்போது சினிமாவில் நடிக்க முடிவெடுத்திருக்கிறார். சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட டிடி, காலில் ஏற்பட்ட ஒரு பிரச்சினை காரணமாக நடக்க முடியாமல் இருந்தார். இதனால் சுமார் 8 மாதங்கள் அவர் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருந்தார். தற்போது மீண்டும் புதிய உற்சாகத்தோடு காப்பி வித் டிடியை நடத்தி வருகிறார்.

சமீபத்தில் காப்பி வித் டிடியில் கலந்து கொண்ட மாதவன் டிடியை சினிமாவில் நடிக்க அழைத்துள்ளார். அதற்கு டிடியும் ஒத்துக் கொண்டிருக்கிறார். மாதவனின் அடுத்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிப்பார் என்று தெரிகிறது. இதுபற்றி அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம் என்கிறது சேனல் வட்டாராம். தொகுப்பாளினி ரம்யாவும் சினிமாவில் நடிக்கவே மாட்டேன் என்று சொல்லிக்கொண்டிருந்தவர் இப்போது தீவிரமாக நடிப்பில் இறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் டிடி ஆரம்பத்தில் நளதமயந்தி, விசில் போன்ற படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts