சினிமாவில் யாருடனும் நட்பு பாராட்டக்கூடாது: சிவ கார்த்திகேயன்

நீண்ட இடைவெளிக்கு பின், சிவகார்த்திகேயன் நடிக்கும், ரெமோ படம் வெளியாக உள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படம் குறித்து, சிவா, நம்மிடம் பேசியதாவது:

ரெமோ படத்தில் என்ன ஸ்பெஷல்?

ரெமோ எனக்கு மட்டும் அல்ல இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் உட்பட, ஒட்டுமொத்த டீமுக்கும் ஸ்பெஷல்.ஹீரோ ஏன் பெண் வேஷம் போட்டான், காதலுக்காக ஒரு இளைஞன் எந்த லெவல் வரை போவான் என்பது தான் ரெமோவின் கதை. இதில், காமெடி, ஆக் ஷன், சென்டிமென்ட், காதல், கலக்கலான பாடல்கள் என, எல்லாமே இருக்கு.

நர்ஸ் வேடத்தில் நடித்த அனுபவம்?

இந்த மேக் அப்பில் என்னை பார்த்து விட்டு, கீர்த்தி சுரேஷ், பெருமூச்சு விட்டார். முதல் நாளிலேயே, படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவருக்கும் இந்த நர்ஸ் வேடம் பிடித்தது. நர்ஸ் வேடத்தில் இருக்கும்போது, படக்குழுவினர் பயங்கரமாக கலாட்டா பண்ணுவாங்க. ஒரு சிலர், ஜாலியாக என்மேல் உரசி விட்டு செல்வது வழக்கமாக இருந்தது.

இந்த மேக் அப் போடுவதற்கு எவ்ளோ நேரம் ஆச்சு?

நான்கு மணி நேரத்துக்கு மேல் ஆகி விட்டது. படப்பிடிப்பு முடிந்ததும், மேக் அப்பை கலைக்கவே, இரண்டு மணி நேரம் ஆகும். இதனால், இரவில் வீட்டுக்கு போகவே, 11 மணி ஆகிவிடும். திரும்பவும், அதிகாலை, 3 மணிக்கு வர வேண்டும். இதற்காக, தினமும், 20 மணி நேரம் உழைத்தோம். எனக்கு, மிகவும் சிறிய கண்கள். அதனால், லென்ஸ் வைத்து நடிக்க வேண்டியிருந்தது. ஷேவ் செய்து முகம் எல்லாம் கீறல் விழுந்தது, ஒரு கட்டத்துக்கு மேல் எனக்கு மீசையே சில இடங்களில் வளராமல் போய் விட்டது. தலையில் போட்ட கொண்டைக்கு, 40 ஹேர்பின் குத்தி விட்டாங்க.

நிறைய குழந்தை ரசிகர்களை பிடிச்சிட்டீங்க போல?

அது, மிகப்பெரிய வரம். சில குழந்தைகள், என் முகத்தை பார்த்தாலே சிரிக்கிறாங்க. எட்டு மாத குழந்தை கூட, என்னை ரசிப்பது சந்தோமாக உள்ளது. என் படங்களில் வரும் பாடல்கள் குழந்தைகளுக்கு பிடிக்கிறது எல்லாமே கடவுளின் ஆசீர்வாதம் என நினைக்கிறேன்.

இந்த படத்துக்கு அதிக சம்பளம் வாங்கியிருக்கீங்களாமே?

இல்லையே ரொம்ப சரியான சம்பளம்தான் வாங்கிருக்கேன். இன்னும் நிறைய கூட வாங்கி இருக்கலாம் ஆனால், நியாயமான சம்பளம் தான் வாங்கியிருக்கேன்.

உங்க அடுத்த படத்தில் நயன் நடிப்பதாக…

ஆம் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கூட நடிப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்த படத்தில், நயன்தாராவின் ரோல், மிகவும் பேசப்படும்.

ரஜினி முருகன் டீம் திரும்பவும் இணைவதாக தகவல் வந்ததே?

ஆமாம்; ரஜினி முருகனுக்கு பின், இயக்குனர் பொன்ராம், வேறு படம் இயக்குவதாக இருந்தது அது தள்ளி போவதால், அடுத்து, எனக்கு படம் இயக்க முடிவு செய்துள்ளார். ஹீரோயின் சமந்தா.

நீங்கள், அறிவாளியா, பொறுமைசாலியா, புத்திசாலியா?

ரொம்ப புத்திசாலி இல்லை சொதப்பவும் மாட்டேன். யாரையும் சிரமப்படுத்த மாட்டேன். ‘இந்த வேலையைச் செய் இது நடக்கும்’ என, யாராவது கூறிவிட்டால், அதை எப்படியாவது சிறப்பாக செய்து முடிப்பேன். ஆனால், ஒரே ஒரு விஷயம் நான் முட்டாள் இல்லை.

நாலரை வருட சினிமா அனுபவம்?

எல்லாமே உழைப்பு தான் என்பதை உணர்ந்து விட்டேன். சினிமாவில் சில விஷயங்கள் இப்படித் தான் நடக்கும் என இருந்தால், அப்படித் தான் நடக்கும் அதை யாரும் மாற்ற முடியாது. சினிமாவில் யாருடனும் அதிகம் நட்பு பாராட்டக் கூடாது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Posts