சினிமாவில் கால்பதிக்கும் கிரிக்கெட் வீரர் டோனி

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் மகேந்திரசிங் டோனி. இவருடைய வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இந்தியில் படமாக எடுத்தார்கள். தற்போது, டோனியே நேரடியாக சினிமாவில் களமிறங்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்தி சினிமாவில் அவர் தயாரிப்பாளராக களமிறங்கப்போவதாக செய்திகள் கூறுகிறது. இந்தி பட இயக்குனர் கரண்ஜோஹர், பிரபல ஹாக்கி வீரர் தியான்சந்த் வாழ்க்கையை படமாக எடுக்கப்போவதாக கடந்த ஆண்டு அறிவித்தார். இப்போது இந்த படத்தை தயாரிக்கும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இதில் வருண் தவான் ஹாக்கி வீரர் தியான் சந்த் வேடத்தில் நடிக்க இருக்கிறார். இதை ரோஹித் வைத் இயக்கு கிறார். இந்த படத்தை எடுக்கும் உரிமையை கிரிக்கெட் வீரர் டோனி வாங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவருடன் கரண் ஜோஹரும் சேர்ந்து இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related Posts