சிந்து நான் உங்களின் தீவிர ரசிகனாகவே மாறிவிட்டேன்: ரஜினிகாந்த்

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிவி சிந்துவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். தாம் சிந்துவின் தீவிர ரசிகனாகவே மாறிவிட்டதாகவும் ரஜினிகாந்த் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக்கில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். ஒலிம்பிக் அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து கொண்டிருக்கின்றன.

ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற வீராங்கனை பி.வி.சிந்துவிற்கு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Posts