சித்த வைத்தியத் துறை ரீசேர்ட் தொடர்பில் மாணவர் ஒன்றியத் தலைவர் விளக்கம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த வைத்தியத் துறை மாணவர்களின் பாவனைக்கென அந்த துறையின் மாணவர் ஒன்றியத்தினால் வெளியிடப்பட்ட ரீசோட்டுகளின் பின் புறத்தில் பல்கலைக்கழக இலட்சினை பொறிக்கப்பட்டமை தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளிவந்த கருத்துக்கள் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதை அடுத்து, இது தொடர்பில் துணைவேந்தர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

சித்த வைத்தியத் துறை மாணவர் ஒன்றியத்தின் தலைவர் சம்பவம் தொடர்பில் விளக்கமளித்த காணொலி யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளது.

ரீசேட்டின் முன்புறத்தில் பல்கலைக்கழகத்தின் இலச்சினையைப் பொறிப்பதற்கு முறையான அனுமதி பெறப்பட்டிருந்த போதிலும், ரீசேட் வடிவமைப்பில் ஏற்பட்ட தவறு காரணமாகவே பின் புறத்தில் ஆங்கில எழுத்துகள் பொறிக்க நேர்ந்ததாகவும், அதற்காகத் தங்களது வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில் இனிவரும் காலங்களில் இந்த ரீசேட் அணிவதைத் தவிர்க்குமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் சித்த வைத்தியத்துறை மாணவர் ஒன்றியத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts