சித்திரை மாதம் 15ம் திகதிக்கு முன்னதாக முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் !!

யாழ்.மாவட்டத்தில் பயணிகள் சேவையில் உள்ள முச்சக்கர வண்டிகளுக்கு சித்திரை மாதம் 15ம் திகதிக்கு முன்னதாக மீற்றர் பொருத்தப்படவேண்டும். என தெரிவித்திருக்கும் யாழ்.மாவட்டச் செயலர் என் வேதநாயகன், முச்சக்கர வண்டிகள் தொடர்பாக பல முறைப்பாடுகள் பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெறுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் பேசி உரிய தீர்மானங்களை எடுத்திருக்கின்றோம். எனவே உரிய நடைமுறை ஒழுங்குகளை சாரதிகள் பின்பற்றவேண்டும். என கேட்டுக்கொள்ளுகின்றோம். இதனை மீறும் சாரதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டச் செயலர் சுட்டிக்காட்டினார்.

Related Posts