யாழில். சித்திரை புருவருட விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. யாழ். தலைமைப் பொலிஸ் நிலையமும் 512 படைப்பரிவினரும் இணைந்து நடாத்தும் புதுவருட விளையாட்டு விழா யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு ஆரம்பமாகியது.
தேசிய கொடி ஏற்றத்துடன், தேசிய கீதம் இசைக்கப்பட்டு இவ்விளையாட்டு விழா ஆரம்பமாகியது.
ஆரம்ப விளையாட்டான மரதன் ஓட்டம் யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆரம்பித்து வைத்தார்.
தொடர்ந்து, ஆண்களுக்கான சைக்கிள் ஓட்டம், பெண்களுக்கான மரதன் ஓட்டம், பெண்களுக்கான சைக்கிள் ஓட்டம், கயிறு இழுத்தல் போட்டிகள் என்பன நடைபெற்றன.
இந்நிகழ்வில், யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.சி.எம். ஜெவ்ரி, மற்றும் யாழ். தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி சமன் சிகேரா உட்பட 512 வது படைப்பிரிவின் பிரிகேடியர் அஜித் பல்லேவல, உட்பட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகரிகள், எனப் பலர் கலந்து கொண்டனர்.