சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த இளைஞனுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்!

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படும் நாகராசா அலெக்ஸிற்கு நீதி கேட்டு வட்டுக்கோட்டையில் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழை கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு செல்லும் வீதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு வீதித் தடைகள் அமைக்கப்பட்டிருந்தன.

உயிரிழந்த நாகராசா அலெக்ஸின் மரணத்துக்கு நீதி கோரியும் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தொடர்ச்சியாக அரங்கேற்றப்பட்டு வரும் சட்ட விரோத சித்திரவதைகளை நிறுத்தக் கோரியும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Related Posts