சிதைவடைந்த ஆலயங்களைப் புனரமைக்க நடவடிக்கை

வலிகாமம் வடக்கு – தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட, யுத்தத்தால் சிதைவடைந்த நிலையிலுள்ள ஆலயங்களை, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் பணிப்புரைக்கமையப் புனரமைக்க, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக, மயிலிட்டி பிரதேசத்திலுள்ள கண்ணகை அம்மன் ஆலயம், முருகன் ஆலயம் என்பவற்றுக்கு, தலா ஒரு மில்லியன் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஒன்பது ஆலயங்களுக்கும் நிதி வழங்கப்பட்டுள்ளது.

Related Posts