சிதம்பரம் செல்வோருக்கான பதிவுகள் ஆரம்பம்

தமிழ்நாடு சிதம்பரம் கோயில் திருவாதிரை உற்சவத்திற்கு வடக்கில் இருந்து செல்லும் பயணிகளுக்கான பதிவுகள் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்று வருகின்றன.

அதன்படி, எதிர்வரும் 12ஆம் திகதி முதல் பயணிகள் தமது பதிவுகளை மேற்கொள்ள முடியுமென்று வடமாகாண ஆளுநர் அலுவலகம் அறிவித்துள்ளது.

சிதம்பரத்திற்கு செல்லும் பயணிகள், வடமாகாண ஆளுநர் அலுவலத்தில் உள்ள இந்து கலாசார திணைக்களப் பிரிவில் தமது கடவுச் சீட்டினை காட்டிப் பதிவுகளை மேற்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts