அவுஸ்திரேலியா, சிட்னி நகரின் மத்தியில் உள்ள உணவகம் ஒன்றில் 13 பேரை தீவிரவாதிகள் பிணைய கைதிகளாக பிடித்து வைத்துள்ளமைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜஸபக்ஷ கண்டம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது டுவிட்டர் வலைதளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தனக்கு ஆழ்ந்த கவலையளிப்பதாகவும் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இலங்கை அவுஸ்திரேலியாவுடன் ஒன்றுபட்டு நிற்பதாகவும் கூறியுள்ளார்.