ஆஸ்திரேலியாவில் சுற்றப்பயணம் மேற்கொண்டுவரும் பிரதமர் நரேந்திர மோடி சிட்னி சென்றுள்ளார்.
ஜி-20 உச்சி மாநாடு முடிந்துள்ள நிலையில் இன்று மோடி சிட்னி நகரில் 9 மணி நேரம் சூறாவளி பயணம் மேற்கொள்கிறார்.
அந்நகரில் உள்ள ஒலிம்பிக் பூங்காவில் மோடிக்கு ஆஸ்திரேலியா வாழ் இந்தியர்கள் பிரமாண்ட வரவேற்பு அளிக்கின்றனர்.
சிட்னியில் உரையாடும் பிரதமர் இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுப்பார் என்று கூறப்படுகிறது.
முன்னதாக பிரிஸ்பேனில் நடைபெற்ற விருந்தோன்றில் பங்கேற்ற மோடி ஆஸ்திரேலியாவில் தமக்கு சிறப்பான வரவேற்பு அளித்தது மிகவும் பெருமைப்படுவதாகவும் கூறினார்.
நாட்டின் தலைநகரங்களுக்கு இடையேயான உறவை விட மாநிலங்களுக்கு இடையிலான உறவை மேம்படுத்துவதில் மிகவும் அக்கரை காட்டுவதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் முதலீடு செய்துள்ள குயின்சாலந்து பிரதமருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். மோடி ஜொரத்தின் கீழ் சிட்னி நகர் இருப்பதாக கான்பரா டைம் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. மோடி வருகை அதிக சக்திவாய்ந்த வருகை பத்திரிக்கை வர்ணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.