தற்போது நாடளாவிய ரீதியில், காலை மற்றும் மாலை வேலைகளில் ஏற்பட்டுள்ள கடுமையான குளிர் காரணமாக, பிறந்த சிசுக்கள், கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் வயோதிபர்கள் ஆகியோரின் உடல்நலம் பாதிக்கும் என்று, குடும்ப சுகாதார பணியகம் அறிவித்துள்ளது.
இந்தக் குளிர்காலத்திலிருந்து தங்களது சுகாதாரத்தை பாதுகாத்துக்கொள்வதற்கு, எந்நேரமும் உடலைச் சூடாக வைத்துக்கொள்வதற்கான ஆடையை அணியுமாறும், சூடான உணவுகளை அருந்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் சத்து நிறைந்த உணவுகளை உண்ணுமாறும், முடிந்தளவு விட்டமீன்களை உணவில் சேர்த்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, சிறுவர்கள் மற்றும் வயோதிபர்களுக்கு, மூச்சுத்திணறல் ஏற்படுவது போன்று அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக வைத்திய உதவியை நாடுமாறும், பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர்.