சிங்கள மாணவனை தாக்கி கையில் ‘தமிழ்” என எழுதிய நபர்கள்

தலவாக்கலையில் உள்ள பிரபல சிங்கள பாடசாலை ஒன்றின் மாணவனை இந்தெரியாத நபர்கள் தாக்கி அம் மாணவனின் கையில் ‘தமிழ்’ என ஆங்கில எழுத்துக்களால் பிளேட் ஒன்றினால் கீறியுள்ளனர்.

student-hand-tamil-2

student-hand-tamil-1

தலவாக்கலை பகுதியைச் சேர்ந்த தரம் பத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவனே இவ்வாறு தாக்குதலுக்குள்ளான நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் பாடசாலை முடிவடைந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, தலவாக்கலை ரயில் நிலையத்துக்கு அருகில் காணப்படும் சுரங்கப் பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களால் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பெற்றோர் தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதோடு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts