சிங்கள சுற்றுலா பயணிகளுக்கே கீரிமலை செல்லும் வீதி அனுமதி; ஏனையோருக்கு தடை

தெல்லிப்பழை சந்தியில் இருந்து கீரிமலை செல்லும் வீதிப்பாவனைக்கு இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. தெல்லிப்பழை சந்தியில் இருந்து கீரிமலை செல்லும் வீதி சிங்கள சுற்றுலா  பயணிகளைத் தவிர ஏனையவர்களுக்கு இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. மே – 18 ஆம் நாளான இன்று முள்ளிவாய்க்காலில் இறுதிப்போரில் உயிரிழந்த உறவுகளுக்கு கீரிமலையில் ஆத்ம சாந்திப்பூஜை மற்றும் பிதிர்க்கடன் செய்ய செல்லக் கூடாது என்ற அடிப்படையிலேயே இந்த தடை உத்தரவினை இராணுவத்தினர்  விதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts