தமிழ் கூட்டமைப்பு, முஸ்லிம் கூட்டமைப்பு போன்ற அரசியல் கட்சிகள் நாட்டில் இருக்கின்ற நிலையில், சிங்கள கூட்டமைப்பு என்ற பெயரிலான அரசியல் கட்சியொன்றை பொது பல சேனா அமைப்பு ஆரம்பிக்கவுள்ளதாக அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
மக்களை ஏமாற்றும் அரசியல் தலைவர்கள், இந்த நாட்டின் தலைவர்களாக மாற, பொது பல சேனா ஒருபோதும் இடமளிக்காது என்றும் இந்த நாட்டின் தலைவர்களை, பொது பல சேனாவே உருவாக்கும் என்றும் ஞானசார தேரர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்த தேரர், இந்த நாட்டின் தலைவர்கள் திருந்துவதற்காக இக்காலப்பகுதியை வழங்குகின்றேன். அவர்கள் திருந்தவில்லையாயின், அதற்குரிய நடவடிக்கையை தான் எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.