சிங்கள இயக்குனருக்கு ஆதரவாக பேசிய ஆடுகளம் ஜெயபாலனுக்கு அடி உதை

With you without you என்ற திரைப்படம் நேற்று தமிழ் உணர்வாளர்களுக்கும், மாணவர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் பிரத்யேக காட்சி மாலை 7 மணிக்கு சென்னையில் உள்ள ஸ்டுடியோவில் திரையிடப்பட்டது.

adukalam_jeyabalan002

இப் படத்தை சிங்கள இயக்குனர் பிரசன்னா விதானகே இயக்கியுள்ளார்.படத்தை பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி, படத்தில் பல இடங்களில் பயங்கரவாதிகள் என்று சொல்லபட்டதிற்கு கடும் எதிர்ப்பினை தமிழ் உணர்வாளர்கள் தெரிவித்திருந்தார்கள்.

ஆனால் குடும்பத்தினருடனும் அவருடைய நண்பர்களுடனும் வந்திருந்த கவிஞர் மற்றும் ஆடுகளம் நடிகருமான ஜெயபாலன், அப்படத்தின் இயக்குனரை ஆதரித்தும் பாராட்டியும் பேசினார்.

இந்த நடவடிக்கையால் தமிழ் உணர்வாளர்கள் கவிஞர் ஜெயபாலனைத் தாக்க முயன்றனர். உடனே போலிசார் வந்து சமாதானவுடன் இயக்குனர் பிரசன்னா விதானகேவிடம் இயக்குனர் கவுதமன் , மே 17 இயக்க தோழர்கள், மாற்றம் மாணவர் இயக்க பிரதீப் குமார், தமிழ் உணர்வாளர்கள், மாணவர்கள் ஊடகவியலாளர்கள் கேள்விகளை கேட்க ஆரம்பித்தனர்.

ஒரு கட்டத்தில் இயக்குனர் கவுதமன் அங்கு நடந்தது இனபடுகொலை என்பதை நீங்கள் ஒரு படைப்பாளியாகவோ அல்லது சிங்களவராகவோ அல்லாமல் ஒரு மனித நேயமிக்கவர் என்ற நிலையில் உங்கள் பதிலை சொல்லுங்கள் என்றார். அதற்கு அந்த இயக்குனர் என்ன சொல்வது என்று தெரியாமல் திணறி திணறி சம்மந்தமே இல்லாத பதிலை சொல்லி மழுப்பினர்.

திடீர் என்று ஆடுகளம் நடிகர் எழுந்து இயக்குனருக்கு பதிலாக அவர் பேச ஆரம்பித்தார். தமிழ் உணர்வாளர்கள் அரங்கம் நிறைய இருந்ததால் ஜெயபாலனால் சமாளிக்க முடியவில்லை.அதேவேளை ஜெயபாலனுக்கு ஆதரவாக அவரது மனைவி தமிழ் உணர்வாளர்களை தகாத வார்த்தையில் திட்டினார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த தமிழ் உணர்வாளர்கள் அவருடனும் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் ஜெயபாலனுடன் வந்த நபர்கள் அதனை தடுத்து நிறுத்தினர்.இதனை தொடர்ந்து ஜெயபாலனுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. அடிவாங்கிய பின் தமிழ் உணர்வாளர்களால் மீது காவல்துறையிடம் புகார் அளிக்க வேண்டும் என்றார்.

Related Posts