சிங்கம்3 யை பார்த்து பயந்து ஓடும் படங்கள்!

சிங்கம்-3 படம் வெளியாவதை முன்னிட்டு சில படங்கள் தங்களுடைய ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளன.

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சிங்கம்-3 திரைப்படம் பல்வேறு இழுபறிகளுக்கு பின்னர் அடுத்தாண்டு குடியரசு தினத்தன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள இந்த படம்,அதே நாளில் வெளியாக இருந்த வேறு சில படங்களுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனால் அந்த படங்கள் தங்கள் வெளியீட்டுத் தேதியை ஒத்தி வைத்துள்ளன.

கோலி சோடா,பத்து எண்றதுக்குள்ள ஆகிய படங்களை இயக்கிய விஜய் மில்டன்,தற்போது பரத் கதாநாயகனாக நடிக்கும் ‘கடுகு’ படத்தை இயக்கி வருகிறார்.இந்த படம் அடுத்தாண்டு குடியரசு தினத்தன்று வெளியாவதாக இருந்தது.சிங்கம்-3 படம் அன்று வெளியாவதால்,கடுகு படத்தின் ரிலீஸ் தேதியை இயக்குநர் விஜய் மில்டன் ஒத்தி வைத்துள்ளார்.

”என்னுடைய முதல் படமான கோலி சோடா குடியரசு தினத்தன்றுதான் வெளியானது.அதே போல் கடுகு படத்தையும் அதே தினத்தில் வெளியிட திட்டமிட்டிருந்தேன்.ஆனால் அன்று சிங்கம்-3 படம் வெளியாவதால்,எனது பட ரிலீஸ் தேதியை தள்ளிப் போட்டுள்ளேன்.இன்னும் பத்து நாட்களில் கடுகு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்.”என விஜய் மில்டன் தெரிவித்துள்ளார்.

இது தவிர குடியரசு தினத்தன்று வெளியாவதாக இருந்த சில சின்ன பட்ஜெட் படங்களும்,தங்கள் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளன.

Related Posts