சிங்கம் 4: உறுதி செய்தார் இயக்குநர் ஹரி!

ஹரி இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதி ஹாசன், அனுஷ்கா நடித்து வெளியான படம் சி 3 (சிங்கம் படத்தின் மூன்றாம் பாகம்). இதற்கு முன்பு வெளிவந்த இரு பாகங்களும் வெற்றி பெற்றதால் சூர்யா – இயக்குநர் ஹரி கூட்டணியில் உருவான சி 3 படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உருவானது. இந்தப் படம், பிப்ரவரி 9 அன்று வெளியானது.

மற்ற இரு பாகங்களைப் போல இந்தப் படமும் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று வெளியான 6 நாள்களில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது. இத்தகவலை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. இதையடுத்து, நடிகர் சூர்யா, இயக்குநர் ஹரிக்கு டயோட்டா ஃபார்சூனர் காரைப் பரிசாக அளித்துள்ளார்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற சிங்கம் 3 படத்தின் தெலுங்குப் பதிப்பு வெற்றி விழாவில் இயக்குநர் ஹரி கூறியதாவது: நானும் சூர்யாவும் இணைந்து நிச்சயமாக சிங்கம் 4 படம் பண்ணுவோம். ஆனால் உடனே அல்ல. அதற்கு எப்படியும் நான்கைந்து வருடங்கள் ஆகும். என்னுடைய அடுத்தப் படம் சாமி படத்தின் இரண்டாம் பாகமாகும் என்றார்.

Related Posts