சிங்கம்–3 படத்தில் சூர்யாவுடன் நடிக்கும் ஸ்ருதிஹாசன்

மழை காரணமாக இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சிங்கம் – 3’ படப்பிடிப்பு தாமதமாகி வருகிறது.

‘சிங்கம் – 2’ படத்தில் சூர்யா ஜோடியாக அனுஷ்கா நடித்தார். இதில் கல்லூரி மாணவியாக ஹன்சிகா நடித்தார். சிங்கம் – 3’ படத்திலும் சூர்யா ஜோடியாக அனுஷ்கா தான் நடிக்கிறார். இதில் அனுஷ்கா சூர்யாவின் மனைவியாக நடிக்க இருக்கிறார். என்றாலும் மற்றொரு நாயகியாக சுருதிஹாசன் நடிக்கிறார்.

சூர்யா எதிரிகளை விரட்டிக் கொண்டு நாடு நாடாக பயணம செய்ய இருக்கிறார். அவருக்கு உதவி செய்யும் சி.ஐ.டி.யாக சுருதிஹாசன் நடிக்கிறார்.

இவரும் சூர்யாவுடன் பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்யும் பாத்திரத்தில் நடிக்கிறார்.

இதன் முதல் கட்ட படப்பிடிப்பு விரைவில் கொல்கத்தாவில் நடைபெற இருக்கிறது. இதில் சூர்யாவுடன் சுருதிஹாசனும் கலந்து கொள்கிறார். அப்போது வில்லன்களை எதிர்க்கும் சூர்யாவுக்கு சி.ஐ.டி.யாக வரும் சுருதிஹாசன் உதவுவது போன்ற காட்சிகள் படமாக்கப்படுகின்றன.

2–வது கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. இதில் அனுஷ்கா நடிக்கிறார். பல்வேறு நாடுகளில் ‘சிங்கம் – 3’ படப்பிடிப்பை நடத்த இயக்குனர் ஹரி திட்டமிட்டுள்ளார்.

Related Posts