சிங்கம்–3 படத்தில் இருந்து அனிருத் நீக்கம்! மேலும் இரண்டு படங்கலிருந்தும் நீக்கம்?

ஹரி இயக்கத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்த சிங்கம், சிங்கம்–2 படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இதையடுத்து ‘சிங்கம்–3’ படம் தயாராக இருக்கிறது. சிங்கம் 2 பாகங்களிலும் போலீஸ் அதிகாரியாக சூர்யாவுடன் நடித்த அனுஷ்கா, இந்த படத்திலும் ஜோடியாக நடிக்கிறார்.

இவர்களுடன் சுருதிஹாசன் சி.ஐ.டி. போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். எந்தெந்த நாடுகளில் படப்பிடிப்பு நடத்துவது என்பது குறித்து ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டது.

இந்த மாத தொடக்கத்தில் ‘சிங்கம்–3’ படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்தது. இசை அமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் படத்துக்கான பாடல்களுக்கு இசை அமைப்பதற்கான எந்த ஏற்பாடுகளையும் அவர் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து அனிருத் நீக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, மழை– வெள்ளம் காரணமாக ‘சிங்கம்–3’ படப்பிடிப்பு தாமதமாகி உள்ளது. பாடல்களும் தயாராகாததால் படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த முடியாத நிலை உருவானது.

தற்போது ‘சிங்கம்–3’ படத்தில் இருந்து அனிருத் நீக்கப்பட்டதாக தெரிகிறது. அவருக்குப் பதிலாக ஹாரீஸ் ஜெயராஜ் ‘சிங்கம்–3’ இசை அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளர். அவர் ‘சிங்கம்–3’ பாடல்களுக்கு இசை அமைக்கும் பணியை தொடங்கி இருக்கிறார். இதுதவிர, வேறு இரண்டு புதிய படங்களில் இருந்தும் அனிருத் நீக்கப்பட்டுள்ளார்.

Related Posts