சிங்கம் 3படத்தின் ”ஓ.. சோனே..சோனே..” பாடல் டீசர்..!

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ’சிங்கம் 3’ படத்தில் இடம்பெறும் ”ஓ.. சோனே.. சோனே,,” பாடலின் டீசர் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

சிங்கம், சிங்கம் 2 ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து,சிங்கம் 3 படத்தில் சூர்யா-ஹரி கூட்டணி மீண்டும் கைகோர்த்துள்ளது.படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ள நிலையில்,இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பழைய பாகங்களுக்கு சற்றும் சளைக்காத அளவிற்கு மூன்றாம் பாகத்திலும் அதிரடியான சண்டைக் காட்சிகள்,அனல் தெரிக்கும் அக்மார்க் ஹரி வசனங்கள் ஆகியவை சிங்கம் 3-யிலும் இருப்பதை சமீபத்தில் வெளியிடப்பட்ட படத்தின் டீசர் உணர்த்தியது.

இந்நிலையில் ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரிக்கும் வகையில்,சிங்கம் 3 படத்தில் இடம்பெறும் “ஓ..சோனே..சோனே…” என்ற பாடலின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பாடலில் நடிகை நீது சந்திரா கவர்ச்சிக் குத்தாட்டம் போட்டுள்ளார்.கிட்டதட்ட சிங்கம் 3 படத்தின் இரண்டாவது டீசர் போல இது உருவாக்கப்பட்டுள்ளது.அந்த பாடல் டீசர் உங்களுக்காக..!.

Related Posts