Ad Widget

சிங்கப்பூரின் நிறுவுனரும் முதல் பிரதமருமான லீயின் உடல்நிலை கவலைக்கிடம்!

சிங்கப்பூரின் நிறுவுனரும் முதல் பிரதமருமான லீ குவான் ஜியூ வின் உடல்நிலை தொடர்ந்தும் மோசமான நிலையில் உள்ளதாகவும் தற்போதும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

singapoor-lee-ku-wan

91 வயதாகும் லீ சிங்கப்பூர் பொது வைத்தியசாலையில் கடந்த பெப்ரவரி மாதம் 05 ஆம் திகதி அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து ஆறு வாரங்களாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். எனினும் அவரது உடல் நிலையில் ஏதும் முன்னேற்றங்கள் இல்லையென்றும் தொடர்ந்தும் மோசமான நிலையிலுள்ளதாகவும் சிங்கப்பூர் அரச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடுமையான நிமோனியா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லீ தற்போது தனது நோய் எதிர்ப்பு சக்தியை இழந்த நிலையில் அவரது உடலில் கிருமிகள் பல இடங்களுக்கு தொற்றும் வேகம் அதிகரித்துள்ளதாக கடந்த செவ்வாய்கிழமை வைத்திய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும் அவருக்கு நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்துகள் வைத்தியர்களினால் கொடுக்கப்பட்டு வருவதுடன் தீவிர கண்காணிப்பில் கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

1965 ஆம் ஆண்டு மலேசியாவிடம் இருந்து சிங்கப்பூர் விடுதலையடைந்த பிறகு தற்போதைய சிங்கப்பூருக்கான அடித்தளத்தை அமைத்த லீ, அந்நாட்டின் முதல் பிரதமரானார். அன்றிலிருந்து 1990 ஆம் ஆண்டு வரை பதவியில் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts