சிக்ஸ் பேக் கிளப்பில் சேர்ந்தார் அதர்வா

இந்தி கான், கபூர் நடிகர்களை பார்த்து தமிழ் நடிகர்களுக்கும் சிக்ஸ்பேக் வைத்துக் கொள்ளும் மோகம் வந்தது. முதன் முறையாக சூர்யா வைத்தார். அதன் பிறகு விஷால், சிம்பு, தனுஷ் என்று வரிசையாக வைக்க ஆரம்பித்தார்கள். தற்போது அதர்வாவும் சிக்ஸ் பேக் கிளப்பில் சேர்ந்திருக்கிறார்.

atharvaa

அவர் தற்போது நடித்து வரும் ஈட்டி படத்தில் தடகள வீரராக நடிக்கிறார். நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஓட்டம் ஆகியவற்றில் சிறந்த இளைஞராக நடிக்கிறார். இதற்காக அவர் ஒரு வருடமாக டயட்டில் இருந்து கடுமையாக உடற்பயிற்சிகள் செய்து சிக்ஸ் பேக் கொண்டு வந்திருக்கிறார். அந்த படங்களை தற்போது வெளியிட்டிருக்கிறார்.

இதுபற்றி அதர்வா கூறியிருப்பதாவது: தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள வரும் ஒருவன், இங்கு எதிர்பாராத பிரச்சினை ஒன்றை சந்திக்கிறான். அதிலிருந்து அவன் எப்படி மீண்டு வருகிறான் என்கிற கதை. இதனால் ஒரு ஸ்போர்ட்ஸ்மேனுக்குரிய பாடிலாங்குவேஜை கொண்டு வரத்தான் இந்த முயற்சி.

கடந்த ஒரு வருடமாக கடுமையான பயிற்சியும், உணவு கட்டுப்பாடும் கடைபிடித்து கொண்டு வந்திருக்கிறேன். சிக்ஸ் பேக் கொண்டு வர ஒரு ஆண்டு வேண்டும். அதை கலைக்க ஒரு நாள் போதும். தொடர்ந்து சிக்ஸ் பேக்கை தொடர இருக்கிறேன். இது தவிர படத்துக்காக எல்லா தடகள விளையாட்டு போட்டியிலும் பயிற்சி பெற்றிருக்கிறேன் என்கிறார் அதர்வா.

Related Posts