சிக்கலில் கமல்ஹாசனின் `சபாஷ்நாயுடு’?

`விஸ்வரூபம்’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த முக்கிய தகவலை நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். அதில் `விஸ்வரூபம் 2′ படத்தின் தடையாக இருந்த முக்கிய பிரச்சனைகள் நீங்கிவிட்டதாகவும், தொழிநுட்ப மற்றும் சட்டரீதியான சவால்களை மட்டுமே சமாளிக்க வேண்டி உள்ளது. எனவே படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் விரைவில் துவங்கி 6 மாதத்தில் படம் திரைக்கு வரும் என்று கமல் தெரிவித்திருந்தார்.

கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான `விஸ்வரூபம்’ படத்திற்கு பிறகு கமல் நடிப்பில் `உத்தமவில்லன்’, `தூங்காவனம்’ உள்ளிட்ட இரு படங்கள் வெளியாகிய நிலையில், விஸ்வரூபம் படத்தின் அடுத்தகட்ட பணிகள் பாதிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து கமல் `சபாஷ் நாயுடு’ படத்தின் பணிகளை தொடங்கினார். படப்பிடிப்பு தொடங்கிய 4 நாட்களில் படத்தின் உண்மையான இயக்குநரான டிகே ராஜுவ்குமாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், இயக்குநரான கமல்ஹாசன் அப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை இயக்கினார்.

அதன் பின்னர் கால் எலும்புமுறிவு காரணமாக சிகிச்சை பெற்ற கமல் அதில் இருந்து மீண்டு `சபாஷ் நாயுடு’ படத்தில் மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.

இந்நிலையில், `சபாஷ் நாயுடு’ படத்தில் அமெரிக்காவில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ருதி ஹாசன், ரம்யா கிருஷ்ணன், தெலுங்கு காமெடி நடிகர் பிரம்மானந்தம் உள்ளிட்டோரின் தேதிகள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டிரம்ப் விதித்துள்ள விசா நடவடிக்கையால் விசா கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே 2 மாதங்களுக்கு பிறகு தொடங்கவிருந்த `சபாஷ் நாயுடு’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த 7 வாரத்திற்குள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார்.

Related Posts